இ-பைலிங் முறை நிறுத்தி வைப்பு..!

கோவை : கோர்ட்டுகளில் இ- பைலிங் முறை கட்டாயம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் மற்றும் காலதாமதம் உள்ளிட்ட காரணங்களால் முழுமையாக சீர் செய்யும் வரை கட்டாய இ -பைலிங் முறையை அமுல்படுத்த கூடாது என்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் கோவை கோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தமிழ்நாடு புதுச்சேரி மாநில வக்கீல்கள் கூட்டு கமிட்டியினர் சென்னையில் ஐ கோர்ட் நீதிபதிகளை சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து கட்டாய இ -பைலிங் முறையை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட் அறிவித்தது. இதனால் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பணிக்கு திரும்பினார்கள். வழக்கு விசாரணைகள் இனி துரிதமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.