கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை இந்த ஆண்டு மிகவும் பிரமாண்டமாக கொண்டாட அதற்கான ஆலோசனை கூட்டம் இந்து முன்னணியின் கோவை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ஏ.எஸ்.டி.சேகர் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் வால்பாறையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை கோட்டசெயலாளர் டி.பாலச்சந்தர் சிறப்புரையாற்றினார் அப்போது எதிர் வரும் 27.08.2025 அன்று புதன்கிழமையன்று 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து 31.08.2025 ஞாயிற்றுக்கிழமையன்று விஜர்சனம் விழாவிற்கு முன்னதாக பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் இந்த ஆண்டு விழாவின் தலைப்பு நம்ம சாமி, நம்ம கோவில், நாமே காப்போம் என்று இருக்கவேண்டும் என்றும் விநாயகர் சிலை அதிகபட்சமாக சுமார் 9 அடி மட்டுமே இருக்க வேண்டும் அதற்கு மேல் சிலைகளின் உயரம் இருக்கக்கூடாது விழாவை சிறப்பிக்க முன்னேற்பாடுகள் அனைத்தையும் நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்தாலோசனை செய்து துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதற்குரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டது இக்கூட்டத்தில் இந்து முன்னணியின் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0