மாதிரி அங்கன்வாடி மையம் திறப்பு.!

டைட்டன் பெயிண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், திருமலையம்பாளையத்தில் மாதிரி அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டது.

இம்மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் திறந்து வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் புதிய கழிப்பறைகள், சுற்றுச்சுவர், தரை மேம்பாடு, பாதுகாப்பான குடிநீர் வசதி, சுவர் ஓவியங்கள் மற்றும் வரைவுக் கலைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளுக்கான பாதுகாப்பான, சுத்தமான மற்றும் மகிழ்ச்சியான கற்றல் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த
நிகழ்வில், அத்வைத் லக்ஷ்மி குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் ரவி சாம், ஐ.சி.டி.எஸ். மாவட்ட திட்ட அலுவலர் டி. தேவகுமாரி, மற்றும் அத்வைத் லக்ஷ்மி குழுமத்தின் இயக்குநர் ஆர். நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.