கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை.!!

கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நாகமாணிக்கம் (வயது48) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சின்னசாமி மகன் முருகேஷ் (வயது43) என்பவர் மீது கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று குற்றவாளி முருகேஷ்க்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ, 5,500அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண் தலைமை காவலர் சங்கீதா ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன்பாராட்டினார்..