ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல். 2 பேர் கைது

கோவை ஆகஸ்ட் 1 கோவை குனியமுத்தூர்,பி.கே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் சைமன் ( வயது 19 )ஆட்டோ டிரைவர். இவர் 2023-ம் ஆண்டு அந்த பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இவர் அவரது வீட்டில் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2பேர் இவரை கத்தியைகாட்டி மிரட்டி எங்களுக்கு எதிராகநீதிமன்றத்தில் சாட்சி சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்களாம்.இது குறித்து சைமன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமத்துவ புரத்தை சேர்ந்த வினித் ( வயது 24) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் ( வயது 29 )ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.