டித்வா புயல்!விசைப்படகுகள்,நாட்டுப் படகுகள்,மீன் பிடிக்க செல்லவில்லை!

நாகை மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முழுவதும் கடலோரப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசி வருவதுடன், கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

வங்க கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்றும் நாளையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசி வருகிறது. மேலும் நாகை ,நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் கடல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள சுமார் 600 விசைப்படகுகள் 3,500 நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.