நீலாம்பூரில் புதிய காவல் நிலையம் திறப்பு.!!

கோவை சூலூர் அடுத்த செங்கோதி பாளையத்தில் நீலாம்பூர் போலீஸ் நிலையம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சங் கோதி பாளையத்தில் நீலாம்பூர் புதிய போலீஸ் நிலையம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நீலாம்பூர் புதிய போலீஸ் நிலையத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இதை யொட்டி நீலாம்பூர்போலீஸ் நிலையம் வாழைமரம் மற்றும் தோரணங்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது .இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பவன் குமார் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.