நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி இருகூரில் 2 மாத காலமாக முடங்கிய சாக்கடை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கியது.

பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

சூலூர்,
ஜூலை 22
இருகூர் பேரூராட்சியில் சுமார் 19000 – க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கே நாராயணசாமி லே அவுட் நகர் பகுதியில் 90 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

முடங்கிய சாக்கடை பணிகள்
நாராயணசாமி லே அவுட் நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் அந்த பகுதியில் பணிகள் நிறைவு பெறாமல் தொடங்கியவுடன் விடப்பட்டதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமலும் வண்டி வாகனங்கள் வீட்டிற்குள் நிறுத்த முடியாமலும், வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தோண்டப்பட்ட குழியில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்த சாக்கடை பணியின்போது குடிநீர் குழாய் இரண்டு மூன்று முறை உடைந்து கழிவு நீரும் குடிநீரும் சேர்ந்து வருவதால் பொது மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. அதே சமயம் தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் உள்ளே செல்லும்போதும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தவறி இந்த சாக்கடை குழியில் விழுகின்றனர். இதனால் பெரிய அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது.
இனி மழை பெய்யும் காலம் தொடங்குவதால் இந்த சாக்கடை குழியில் கழிவு நீர் தேங்கி நோய் தொற்று பரவும் அபாயமும். இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்பட்டு காற்று மாசுபடுதல், நிலத்தடி நீர் மாசுபடுதல், பொது மக்களுக்கு சுவாச கோளறுகள் ஏற்படுத்துதல் போன்ற பிரச்சினைகள் உருவாகியது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அவர்கள் வீட்டினுள் செல்வதற்கு தற்காலிகமாக மரப்பலகை மற்றும் மூங்கில்களால் பாதை அமைத்து உள்ளனர். தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

மீண்டும் பணிகள் தொடக்கம்
மேலும் இது தொடர்பாக
நியூஸ் எக்ஸ்பிரஸ் செய்தி சமூக வலைதளம் வாயிலாக வீடியோவுடன் செய்தி வெளியாகி இருந்தது தொடர்ந்து இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாராயணசாமி லே அவுட் நகர் பகுதியில் முடங்கிக் கிடந்த சாக்கடை அமைக்கும் பணிகள் மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்ந்து நாராயணசாமி லே அவுட் பகுதியில் சாக்கடை கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் பொது மக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.