வடமாநில தொழிலாளியை வழிமறித்து ரூ 10 ஆயிரம் கொள்ளை.

3பேருக்கு வலை கோவைஜூலை 24 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோம்குமார் (வயது 25) இவர் குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர் ரோட்டில் உள்ள நிகில் கார்டனில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார், நேற்று இவர் கோவை புதூர் சந்திப்பில் மீன் வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர்இவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ 10 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து சோம்குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்கு பதிவு செய்து 3 கொள்ளையர்களை தேடி வருகிறார்.