நர்சிங் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கோவை ஜூலை 2கோவை ராமநாதபுரம், 80 அடி ரோடு, அங்கணன் வீதியைச் சேர்ந்தவர் ஹரி சங்கர். இவரது மகன் வர்ஷினி (வயது 17) இவர் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்தார்.இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாயார் ராமலட்சுமி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவுசெய்துவிசாரணை நடத்தி வருகிறார்.