கிரேன் மோதி ரோட்டில் நடந்து சென்ற முதியவர் சாவு

கோவை ஆகஸ்ட் 23 கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட்டைசேர்ந்தவர் அப்துல் (வயது 72) இவர் நேற்று புல்லுக்காடு – கரும்புக்கடை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாகவந்த கிரேன் இவர் மீது மோதியது. இதில் அப்துல் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் .இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார் .இது தொடர்பாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கிரைன் டிரைவர் சாந்த சங்கர் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.