பிறந்து 45 -வது நாளில் தடுப்பு ஊசி போட்டதும் குழந்தை திடீர் சாவு

கோவை ஜூலை 21 கோவை வேலாண்டிபாளையம் ,மருத கோனார் வீதியை சேர்ந்தவர் புவனேஸ்வரர். இவருக்கு 1-6 -20 25 அன்று கே.கே. புதூர் ஆரம்ப சுகாதார மையத்தில் ஆண் குழந்தை பிறந்தது .19 – 7 – 2025 .அன்று 45 வது நாள் தடுப்பூசி போடுவதற்காக ஆரம்ப சுகாதார மையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஊசி போட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக இறந்தது .இது குறித்து தந்தை புவனேஸ்வரன் போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.