கோவை காவல் நிலையத்தில் புகுந்து எஸ்.ஐ. அறையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை

கோவை ஆகஸ்ட் 6 கோவை, பி- 1 கடைவீதி காவல் நிலையத்துக்கு நேற்று இரவு 11 மணி அளவில் ஒருவர் பதற்றத்துடன் ஓடி வந்தார்.தன்னை சிலர் கொலை செய்ய துரத்தி வருவதாக கூறி காவல் நிலையத்தில் தஞ்சம்புகுந்தார்.அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஒருவர்காவல் நிலையத்துக்குள் உட்கார வைத்திருந்தார்..திடீரென்று அந்த நபரை காணவில்லை..இந்த நிலையில் இன்று காலையில் முதல் மாடியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அறையில் அந்த நபர் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.விசாரணையில் தூக்கில் தொங்கியவர் சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் ?என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.