கோவை ஆகஸ்ட் 11 கோவை பீளமேடு ரயில் நிலையம் அருகேதண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 45 வயது இருக்கும். சிவப்பு நிறம் உடையவர். வெள்ளை நிறத்தில் கோடு போட்ட டி-ஷர்ட், நீல நிற பேண்ட் அணிந்து உள்ளார். அவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ?என்ற விபரம் தெரியவில்லை .அவர் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரயில் முன்பாய்ந்து தற்கொலைசெய்து கொண்டார் ? என்பது குறித்து கோவை ரயில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0