டெல்லியில் நேற்று முன்தினம் கார் வெடித்தது .இதில் 10 க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள் 24 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டது. நேற்று முன்தினம் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர் .
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியில் நிரந்தரமாக 16 இடங்களில் சோதனை சாவடிகள் உள்ளன .டெல்லி சம்பவத்தை தொடர்ந்து கூடுதலாக 36 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 52 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வருகின்றனர். குறிப்பாக பிற மாவட்டங்களில் மற்றும் மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் அனைத்துவாகனங்களும் கண்காணிக்கப்பட்டது. அதில் வந்தவர்கள் விவரங்களை சேகரிக்கப்பட்டன. நிலைமை சீரடையும் வரை கண்காணிப்பு தீவிர படுத்தப்படும். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






