கோவை ஆகஸ்ட் 9 கோவை பொன்னைய ராஜபுரத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து முடித்த மாணவர் எம்.பி.பி.எஸ். படிக்க நீட் தேர்வு எழுதினார். அதில் அவருக்கு கிடைத்த மதிப்பெண்ணை வைத்து பார்த்தால் வெளிநாட்டு வாழ் இந்தியர் பிரிவில் தான் இடம் கிடைக்கும். எனவே அவர் அந்த பிரிவில் தனக்கு இடம் கேட்டு விண்ணப்பித்தார். அப்போது தனது பெரியப்பா “மஸ்கட்டில் ” இருப்பதாகவும், அவர்தான் தன்னை படிக்க வைத்து வருவதாகவும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு உறவுமுறை சான்றிதழ் கேட்கப்பட்டது .அந்த சான்றிதழ் எப்படி பெறுவது? என்பது குறித்து தனது தந்தையிடம் கேட்டார். அதற்கு அவர் தனக்கு தெரிந்த வெள்ளியங்கிரி என்பவர் இடையர்பாளையத்தில் உள்ளார். அவரிடம் சென்று கேட்டால் அனைத்து உதவிகளும் செய்வார் என்று கூறியுள்ளார். அதன்படி வெள்ளியங்கிரியை சந்தித்த அந்த மாணவர் உறவு முறை சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார் அதற்கு அவர் எனக்கு தெரிந்தவர் கோவை தெற்கு பகுதி தாலுகா அலுவலகத்தில் உள்ளார். எனவே அவரை சென்று சந்தித்தால் உடனடியாக அந்த சான்றிதழ் வாங்கி கொடுத்து விடுவார் ஆனால் அதற்கு அவர் ரூ 10ஆயிரம் பணம் கேட்பார் என்று கூறினார் .இதை யடுத்து அந்த மாணவர் வெள்ளியங்கிரியிடம் ரூ. 10 ஆயிரம் கொடுத்ததார். பின்னர் ஒரு வாரம் கழித்து வெள்ளியங்கிரி கூறியதாக ஒருவர் அந்த மாணவரிடம் சான்றிதழ் ஒன்றை கொடுத்தார் .அந்த சான்றிதழ் மாணவர் ஆன்லைனில் தனது விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்தார் அப்போது அந்த சான்றிதழ் போலியானது என்று தமிழ்நாடு மருத்துவ தேர்வுக்குழு அறிவித்தது .அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர் இது தொடர்பாக கோவை தெற்கு பகுதி தாசில்தாரைசந்தித்து கேட்டார். அவரும் அந்த சான்றிதழை பார்த்து இது போலியாக தயாரிக்கப்பட்டது என்று கூறினார். இது குறித்து அந்த மாணவர் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..முதல் கட்ட சாரணையில் வெள்ளியங்கிரி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த சான்றிதழை போலியாக தயாரித்து போலி ரப்பர் ஸ்டாம்ப் மூலம் சீல் வைத்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்கள் இதற்கு முன் சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளனரா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0