கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சேக் முகமத். இவர் பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்று விட்டு, கோவைக்கு வரும் இன்டர்சிட்டி ரயிலில் பயணித்துள்ளார். இவரது அருகே, சென்னையில் சட்ட கல்லூரி பயிலும், கோவையைச் சேர்ந்த மாணவி உடன் பயணித்துள்ளார்.
அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அருகே அமர்ந்து இருந்த காவலர் சேக் முகமத், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது செல்போனில் இதனை வீடியோ பதிவு செய்தார்.
இது குறித்து அந்த மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவரை காவல் துறையினர் ரயிலில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் இருந்து சேக் முகமத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.









