தயாராகும் பொங்கல் பானைகள்.!!

பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண்பானை செய்யும் கலைஞர்கள் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே புதுப்பானைகள் செய்யும் பணியை தொடங்கி விட்டனர். கவுண்டம்பாளையம் அவுசிங் யூனிட் அருகே உள்ள மண்பானைகள் விற்பனை செய்யும் கடையில் பொங்கல் மண்பானைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டு வருகிறது .பொங்கல் வைக்க ஏற்ற அளவில் பானைகள் சிறியதும் பெரியதுமாக தயாரிக்கப்படுகிறது. புதிய பொங்கல் பானைகள் ரூ 200 முதல் 1000 வரை அளவுக்கு ஏற்ற வகையில் விற்கப்படுகிறது. மற்றும் அடுப்புகளும் விற்பனைக்கு உள்ளன.