கோவை ரயில் நிலையத்தில் போலீஸ் பிடியிலிருந்து கைதி தப்பி ஓட்டம்

கோவை ஜூலை 29 பாலக்காடு மாவட்டம் ,ஆலநல்லூரை சேர்ந்தவர் ஆனந்தன் பி.தம்பி ( வயது 40) மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு முக்கிய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்து வந்தார்.இவரை மேற்கு வங்க போலீசார்கைது செய்துதிருவனந்தபுரத்திலிருந்து சாலிமார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆல்வாய் ரயில் நிலையத்திலிருந்து சந்திர காஞ்ச் அழைத்துச் செல்ல ஏ 1 பெட்டியில் பயணம் செய்தனர்..இந்த ரயில்நேற்று அதிகாலை 2 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தது. 10 நிமிடம் நின்று விட்டு புறப்படும் போது போடும் ஒடும் ரயிலில் இருந்து தம்பி குதித்து தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.