வீட்டில் விபச்சாரம் : பெண்உட்பட 2 பேர் கைது

கோவை ஆகஸ்ட் 9 கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னையன் நேற்று சுந்தராபுரம் அன்னை சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார், அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மதுக்கரை ,திருமலையாம் பாளையத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 25 ) திருமலையாம் பாளையம் ,ஆண்டவர் நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.போத்தனூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த சித்ரா என்பவர் தலைமறைவாகி விட்டார்.இவரை போலீசார் தேடி வருகிறார்கள்.