கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் 7 வயது மகன் நூர்ஜிஹான் உயிரிழந்ததைத் தொடர்ந்து வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் தாக்குதலால் ஏற்பட்டுவரும் உயிரிழப்புக்களை தடுக்கத்தவறியதாக தமிழக அரசு மற்றும் வனத்துறையை கண்டித்து வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பு தவெக வினர் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் தவெகவின் வால்பாறை நகர் தலைவர் ஆண்ட்ரூஸ் தலைமையில் செயலாளர் செய்யது அலி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீ தரன் கலந்து கொண்டு வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம் பகுதியில் வனவிலங்குகளால் தொடர்ந்து ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தடுக்க நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர உள்ளதாகவும் இனிமேலும் வனவிலங்குகளால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் வனத்துறையின் மூலம் தொடர் நடவடிக்கை மேற்க் கொள்ள தவெக வலியுறுத்துவ தாகவும் தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தவெகவின் நகர, கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0