அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றிகளை தெரிவித்த பொதுமக்கள்

நீலகிரி மாவட்ட உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட பம்பலக்கோம்பை பகுதியில் களஆய்வு செய்த போது, அங்குள்ள சமுதாயக் கழிப்பிடத்தில் போதுமான தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களிடம் தெரிவித்ததன் அடிப்படையில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை முன்னிட்டு, (05.05.2025) உலிக்கல் பேரூராட்சியின் சார்பில் சமுதாயக் கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, நீர் குழாய்கள் சரிசெய்து, தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது,