தொழிலதிபரிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது..!

கோவை அருகே உள்ள துடியலூர், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 53) தொழிலதிபர் . இவர் சம்பவத்தன்று துடியலூர் சந்தை ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் வந்து 2வாலிபர்கள் இவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து திடீரென்று பிரகாஷ் கழுத்தில் கடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து துடியலூர் போலீசில் பிரகாஷ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர் .இது தொடர்பாக தேனி மாவட்டம் கோடங்கிபட்டி சேர்ந்த சிவா (வயது 22) பெரம்பலூர் சேர்ந்த கிஷோர் என்ற பார்த்த சாரதி (வயது 24)ஆகியோரை நேற்று கைது செய்தனர் .இவர்களை பிடிக்க செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவருக்கு காலிலும், மற்றவருக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.