ஓடும் பஸ்சில் பெண்ணிடம் திருட்டு..!

கோவை தடாகம்ம் அருகே உள்ள கலையனூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கார்த்திகா (வயது 32) இவர் நேற்று தனியார் டவுன் பஸ்சில்பயணம் செய்தார். கணுவாயில் இருந்து கோவில் மேடு பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவர் கைபையில் வைத்திருந்த ரூ 50 ஆயிரத்தை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடி விட்டனர் .இது குறித்து கார்த்திகா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.