கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கெம்பனூர் பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறி பிடிக்கப்பட்ட ஆண் காட்டு யானை ரோலக்ஸ் கடந்த மாதம் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியாறு முகாமில் உள்ள மரக்கூண்டில் ஒரு மாதம் வைக்கப்பட்டு பின்னர் வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மற்றும் பகுதியில் விடப்பட்டது
இந்நிலையில் ரோலக்ஸ் யானை கழுத்தில் மாட்டப்பட்ட காலர் ஐடியில் இருந்து சிக்னல் வாராததால் வனத்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் சோதனை செய்ததில் ரோலக்ஸ் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.






