ரூ.1 கோடி நகை திருட்டு..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 60) இவரது மனைவி எஸ்தர் .இவர்கள் கோவை குனியமுத்தூர்,நரசிம்மபுரம் அய்யப்பா நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளன. இதில் ஜெபமார்டின் என்பவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரி யை யாகவேலை பார்த்து வருகிறார் .மற்றொரு மகள் டெல்ஹி காந்திபுரத்தில் வசித்து வருகிறார். 2 நாட்களுக்கும் முன் உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ராஜன் தனது மனைவி, மகள்களுடன் சொந்த ஊரான சாத்தான்குளத்திற்கு புறப்பட்டு சென்றார். ஊருக்கு செல்வதற்கு முன்பு டெல்ஹியின் 52 பவுன் நகை ஜெபமார்ட்டின்மற்றும் அவரது தாயாரின் 52 பவுன் நகைகளை பீரோவை வைத்து பூட்டிவிட்டு சென்றனர். பின்னர் அங்கே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிவிட்டு ராஜன் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை வீட்டிற்கு திரும்பினார். வீட்டுக்கு சென்று பார்த்த போது முன் கதவு திறந்து கிடந்தது இதனால் அதிர்ச்சி அடைந்தவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார் .அப்போது பிரோ திறந்து கிடந்ததுடன் அதிலிருந்த 104பவுன் நகைகள் மற்றும் ரூ 9 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்து பொருட்கள் கட்டிலில் சிதறி கிடந்தன. உடனடியாக இதுகுறித்து குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் கோவை தெற்கு பகுதி துணை கமிஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்ஆகியோர்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீஸ் மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டது . அது சிறிதுரம் சென்றது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. போலீசாரின் முதல் கட்டவிசாரணையில் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைக்காமல் கள்ளச்சாவி போட்டு திறந்துள்ளனர். இதைப்போல் பீரோவையும் கள்ளச் சாவி போட்டு திறந்து உள்ளனர். எந்த தடயமும் இல்லாமல் ரூ 1 கோடி மதிப்பு நகைகள் கொள்ளை யடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளைகும்பலைபோலீசார் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து துணை கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:- கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளதால் இந்த வீட்டின் சாவியை போல் கள்ளச்சாவி தயாரித்து இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்திக்கிறோம். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கபோலீஸ் கமிஷனர் சரவணா சுந்தர் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செல்போன் சிக்னல் களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ராஜன் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்கள் இந்த கைவரிசையைகாட்டி உள்ளனரா? அல்லது வேறு யாருமா ? என்று தீவிர விசாரணை நடைபெறுகிறது. இவர் அவர் கூறினார் கோவையில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ 1கோடி நகை மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குனிய முத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..