கோவை விமான நிலையத்தில் ரூ 17 லட்சம் வெளிநாட்டு சிகரெட் – செல்போன்கள் பறிமுதல்

2 பேரிடம் விசாரணை.கோவை ஆகஸ்ட் 5 கோவை சர்வதேச மாநிலத்தில் இருந்து அபுதாபிக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் போதை பொருள். தங்கம் ,மின்னணு சாதனங்கள், ட்ரோன்கள் ,சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது .இதை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று முன்தினம் அபுதாபியில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு ஒரு விமானம் வந்தது. அதில் கோவைக்கு வந்த பயணிகளின் உடைமைகளை சுங்க துறை அதிகாரிகள் சிறப்பு ஸ்கேன் எந்திரம் மூலம் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகளின் பைகளை சோதனை செய்தபோது அதில் 308 சிறிய அட்டைப் பெட்டிகளில் சிகரெட்,பாக்கெட்டுகள் 60 அட்டை பாக்கெட்டுகளில் இ- சிகரெட் பாக்கெட்டுகள் ,31 உயர் ரக செல்போன்கள், 4 மடிக்கணினிகள், 6 ட்ரோன்கள்இருப்பதுஇருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் அவற்றை கடத்தி வந்தது திருச்சியை சேர்ந்த அகஸ்டின் பியோ மற்றும் தஞ்சாவூர் சேர்ந்த முகமது அப்சல் என்பது தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 17 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகளை தெரிவித்தனர். அவர்கள் 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.