நீலகிரி மாவட்டம் உதகையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகம் உதகை மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள அருளகம் என்னுமிடத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 27 28 வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற சிறப்பு ஏற்பாடுகளை தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை அதிகாரிகள், உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ், அரசு துறை ஊழியர்கள் மற்றும் 27 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர் ஆகியோர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தன, உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு 27 வது வார்டு மக்களை நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர் வீடு வீடாக சென்று மக்களை முகாமிற்கு வர அழைப்பு தந்தார், அதனைத் தொடர்ந்து காலையில் நடைபெற்ற முகாமிற்கு வருகை தந்த ஒவ்வொரு பகுதி மக்களையும் தனிப்பட்ட முறையில் விசாரித்து மனுக்களுக்கான தேவையான ஆலோசனைகள் வழங்கிய பகுதி நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர் மற்றும் முன்னாள் நகரம் என்ற உறுப்பினர் சுதாகர், முகாமிற்கு உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேசன் உதகை நகர தலைவர் வாணிஸ்வரி, 27 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர், ஆகியோர் பார்வையிட்டு மக்களின் மனுக்களுக்கான ஆலோசனை வழங்கினார்கள், உடன் மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் சுதாகர், வின்சன்ட், ஆகியோர் உடன் இருந்தனர், இந்த முகாமில் மருத்துவ முகாம், மகளிர் உதவித்தொகை குறித்தான விண்ணப்பங்கள், ஏழை எளிய மக்களுக்கு ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு குறித்தான அனைத்து திட்டங்களும் இமுகாமில் காணப்பட்டன இதனை பார்வையிட்ட உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர் கணேசன் மக்களிடம் நேரடியாக குறைகளை விசாரித்து தேவையான ஏற்பாடுகளை செய்து தர அதிகாரிகளை கேட்டறிந்தார், அதனைத் தொடர்ந்து, உதகை நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி வரும் மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களுக்கான ஆலோசனை வழங்கி அதிகாரிகளை சந்திக்க காலை முதல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நிறைவு பெறும் வரை உடன் இருந்தனர், மற்றும் உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், பொருளாளர் நாசர் அலி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர், மற்றும் முன்னாள் கவுன்சிலர் சுதாகர் வின்சென்ட், காந்தல் ரவி,கார்த்திக், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் எலிகள் ரவி, விஷ்ணு பிரகாஷ், ரமேஷ், மற்றும் கழக நிர்வாகிகளுடன் முகாமினை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடி தேவைகள் வழங்கப்பட சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார், முகம் சிறப்பாக நடைபெற வருவாய்த்துறை உதகை வட்டாட்சியர் சங்கர் கணேஷ் அரசு துறை அதிகாரிகள் மற்றும் 27 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜெயலட்சுமி சுதாகர், முன்னாள் கவுன்சிலர் சுதாகர் ஆகியோரின் ஏற்பாட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை வழங்கி பயனடைந்தார்கள்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0