பைக் மீது கார் மோதி அண்ணன் பரிதாப சாவு, தம்பிபடுகாயம்!!

கோவை அக்டோபர் 24 கோவை துடியலூர் ஜி. என். மில்ஸ், மணல் தோட்டம் ,விவேக் நகரை சேர்ந்தவர் பழனியப்பன் .இவரது மகன்கள் கணேஷ் ( வயது 32) சண்முக குமார் (வயது 27)இவர்கள் இருவரும் நேற்று ஒரே பைக்கில் வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோடு இந்திரா நகர்பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது இதில் பைக் ஓட்டி வந்த கணேஷ் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். பின்னால் பரிதாபமாக இறந்தார். தம்பி சண்முக குமார் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தந்தை பழனியப்பன் மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த வடவள்ளி, பொம்மணாம் பாளையம்,பிரபா நகரை சேர்ந்ததினேஷ் பாண்டியன் ( வயது 34)மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.