பைக் -லாரி மோதல் : வாலிபர் சாவு

கோவை அக்டோபர் 8 கிருஷ்ணகிரியைசேர்ந்தவர் அசோகன். இவரது மகன் விஜய் ( வயது 30)இவர் நேற்று கவுண்டம்பாளையம் – நல்லாம்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவரது பைக் மீது மோதியது இதில் விஜய் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினார்.இது தொடர்பாக டிப்பர் லாரி ஒட்டி வந்த நல்லாம்பாளையம், பழனி வீதியைச் சேர்ந்த டிரைவர் தங்கமுத்து (வயது 35) கைது செய்யப்பட்டார் மேலும் விசாரணை நடந்து வருகிறது..