கோவை அரசு மருத்துவமனை முன் குடிபோதையில் இளம் பெண் ரகளை

கோவை அக்29 கோவை அரசு மருத்துவமனை முன் இன்று காலையில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்தார்.இவர் நடுரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்தார்.இதை தட்டி கேட்டவர்களை இந்தியில் திட்டினார்.இதனால் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது.இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்த போலீசார் அந்த பெண்ணைஉடனடியாக அப்புறப்படுத்தினார்கள்.