தொழிற்சாலையில் புகுந்து திருடிய 2 பேர் கைது

கோவை அக் 29 கோவை குனியமுத்தூர் தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் தர்மராஜ் ( 42) இவர் குனியமுத்தூர் இடையர்பாளையம் மெயின் ரோட்டில் கிரில் கேட் தயாரிக்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்றுஇரவில் யாரோ ஒர்க் ஷாப் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துஅங்கிருந்த இரும்பு ராடு , கட்டிங் மெஷின் ரூ2,800 பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இது குறித்து தர்மராஜ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கரும்பு கடை ஆசாத் நகர் சேர்ந்த அபிஷேக் என்ற ஆசனார் (வயது 27) சாரமேடு ,மன்சூர் ரகுமான் ( வயது 26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டூல்ஸ், கட்டிங் எந்திரம், பறிமுதல் செய்யப்பட்டது,இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.