கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் இன்று பேட்டி.
கோவை செப்டம்பர் 8: அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
கோவையில் இருந்து விமான மூலம் இன்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற அவர் முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க நான் டெல்லிக்கு செல்லவில்லை. மன நிம்மதிக்காகவும், கட்சியின் நலனுக்காகவும் ராமரை தரிசிக்க ஹரித்துவார் செல்கிறேன். அதிமுகவில் இருந்து நான் நீக்கப்பட்டதால் எனக்கு தொண்டர்கள் பலர் தொடர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர். நாளை
செவ்வாய்க்கிழமை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடப் போவதில்லை. நான் செய்தியாளர்களையும் சந்திக்கப் போவதில்லை.
கட்சி நலனுக்காக அனைவரும் ஒன்றிணை வேண்டும் என நாங்கள் கூறுகிறோம். பொதுச் செயலரின் முடிவுக்கு நான் கருத்து சொல்ல முடியாது. என் மீது பழனிசாமி எடுத்த நடவடிக்கைக்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி வளர வேண்டும் என்பதே என் நோக்கம்.
ஓபிஎஸ் தன்னை சந்திக்க வருவதாக வெளியான தகவல் அல்ல.
அதிமுக மூத்த நிர்வாகிகள் யாரும் சந்தித்தார்களா? என்ற செய்தியாளர்களின்கேள்விக்கு அது “சஸ்பென்ஸ் ” .இவ்வாறு அவர் கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0