கோவை பஸ்நிலையத்தில் கேரள பஸ் கண்ணாடி உடைப்பு

டிரைவருக்கு அடி -உதை.கோவை ,அக்டோபர் 22 கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பஸ் நிலையத்தில் கேரள அரசுக்கு சொந்தமான பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமி ஒருவர் குடிபோதையில் பஸ் நிலையத்திற்குள்புகுந்து அங்கு நிறுத்திருந்தகேரளா அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளார் அப்போது பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் சாஜி அதை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தஆசாமி டிரைவர் சாஜியை தரக்குறைவானவார்த்தைகளால் பேசி தாக்கினாராம்.. இது குறித்துசாய்பாபா காலனி போலீசில் டிரைவர் சாஜி புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் வழக்கு பதிவு செய்து என்.ஜி. . ஜி. ஓ .காலனி செங்காளிபாளையம், காந்தி காலனி சேர்ந்த கோபிராஜ் (வயது 44) என்பவரை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.