கோவை ஆகஸ்ட் 29 கோவை மதுக்கரை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது 64)இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த வசந்தகுமாரி (வயது 45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ள காதலாக மாறியது இதை அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் பேச்சிமுத்துடன் பழகுவது நிறுத்துமாறு அறிவுரை கூறியுள்ளனர் .இதன் காரணமாக பேச்சிமுத்துடன் பழகுவதை வசந்தகுமாரி தவிர்த்தார்.இதனால் அவர் மீது பேச்சு முத்துவிற்கு சந்தேகம் ஏற்பட்டது .இந்த நிலையில் கடந்த 15 – 3- 20 24 அன்று இரவு 9 – 15 மணிக்கு வசந்தகுமாரியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தாராம். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே பேச்சிமுத்து தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு வசந்தகுமாரியை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது .இதனால் ஆத்திரமடைந்த பேச்சி முத்து வசந்தகுமாரியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த வசந்தகுமாரியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிகிச்சை பலனளிக்காமல் வசந்தகுமாரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலை மறைவாக இருந்து பேச்சிமுத்துவை கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரித்த நீதிபதி சுந்தரராமன் பேச்சிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜீஷா ஆஜராகி வாதாடினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0