கோவை அக்டோபர் 24 தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கோவையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்தது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .நேற்று நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி அளவிற்கு தண்ணீர் சென்றது. இந்த தண்ணீர் கோவை குளங்களுக்கு திருப்பி விடப்பட்டன .இதில் பெரும்பாலான குளங்கள் நிறைந்தன. இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நொய்யல் ஆற்றை நீராதாரமாகக் கொண்டு பேரூர் பெரியகுளம், செங்குளம், சொட்டையாண்டி குட்டை ,முத்தண்ணன் குளம் உட்பட 24 குளங்கள் உள்ளன. தற்போது பெய்த பருவமழையால் குளங்களுக்கு அதிக அளவு தண்ணீர் வரத்து காணப்பட்டது. இதனால் அந்த குளங்கள் வேகமாக நிரம்பின. நொய்யல் வழித்தடத்தில் உள்ள 24 குளங்களில் பேரூர் பெரியகுளம் மட்டும் 97 சதவீதம் அளவிற்கு நீர் நிறைந்துள்ளது. மேலும் சின்ன வேடம்பட்டி மற்றும் எஸ் .எஸ் . குளத்தில்குளம் தண்ணீர் செல்வதில் உள்ள பிரச்சனை காரணமாக நிரம்பாமல் உள்ளது. கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம், வாலாங்குளம், வேடப்பட்டி புதுக்குளம் உட்பட 21 குளங்கள் முழுவதும் நிரம்பிவிட்டன. தற்போது நொய்யலில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் செல்கிறது .இவர் அவர்கள் கூறினார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





