நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை ஆ.இராசா எம்.பி., வழங்கி சிறப்புரையாற்றினார்

திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு, உதகை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உதகை சிறுவர் மன்றத்தில் மாவட்ட திமுக துணை செயலாளர் உதகை நகரமன்ற துணை தலைவர் ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது, பொதுக்குழு உறுப்பினர் – உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார்,
நிகழ்ச்சியில் கழக துணை பொதுச்செயலாளர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் உதகையில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றி தூய்மை பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தினார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார், நடைபெற்ற நிகழ்ச்சியில்
நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், தேர்தல் பணி செயலாளர் – அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவை தலைவர் போஜன், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், Expo செந்தில், தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, உதகை கிழக்கு நகர செயலாளர் ஜார்ஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் பரமசிவன், காமராஜ், தொரை, ஜெகதீசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, காளிதாசன், கெந்தொரை மகேஷ், நகர கழக நிர்வாகிகள் ஜெயகோபி, கிருஷ்ணன், ரீட்டா, அணில்குமார், கார்திகேயன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, காந்தல் ரவி, எல்கில் ரவி, ரஹமத்துல்லா, நாகராஜ், LPF ஜெயராமன், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் கீதா, நாகமணி, விஷ்னுபிரபு, செல்வராஜ், கஜேந்திரன், ரகுபதி, திவ்யா, மீனா, அனிதாலட்சுமி, வனிதா, பிளோரீனா, மேரி பிளோரீனா, பிரியா வினோதினி உட்பட அணிகளின் துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், செயல் விரர்கள் விழாவில் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் இனிப்புகளையும் வழங்கி வாழ்த்தினர், தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் உதகையில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்கள் ஆண்கள் பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேலானவர்கள் கலந்து கொண்டு மதிய சிறப்பு விருந்திலும் கலந்து கொண்டனர்,
நிகழ்ச்சி முடிவில் உதகை மேற்கு நகர கழக பொறுப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.