கோவை செப்டம்பர் 6 கோவை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு “இமெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல்வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .இந்த நிலையில் நேற்று அரசு விடுமுறை என்பதால் மதியம் 1 மணிக்கு கலெக்டர் அலுவலக இமெயிலுக்கு ஒரு கடிதம் வந்தது .அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் அது வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கலெக்டர் பவன் குமாருக்குதகவல் தெரிவித்தனர் .இது தொடர்பாக கோவை மாநகர போலீசில் புகார் செய்யப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு செயலிழப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர் எந்த பகுதியில் வெடிகுண்டு கிடைக்கவில்லை. அதனால்அது வீண்புரளி என்பது தெரிய வந்தது. கடந்த 10 நாட்களில் கோவை கலெக்டர்அலுவலகத்துக்கு 4 தடவை வெடிகுண்டு விரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.எனவே இது போன்ற மிரட்டல் விடுபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0