டாஸ்மாக் பாரில் கள்ள சந்தையில் மது விற்ற 3 பார் ஊழியர்கைது.

கோவை செப்டம்பர் 9 கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு நேற்று காமராஜர் ரோடு டாஸ்மாக் கடைப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் அப்போது மதுபாட்டில் பதுக்கி வைத்துஅதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பார் ஊழியரான மதுரை, வண்டியூரை சேர்ந்த சபரி முத்து என்ற தாஸ் (வயது 54) கைது செய்யப்பட்டார். 25 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.வசந்தா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சோதனை நடத்தியபோது கள்ள சந்தையில் மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் போலாம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி ( வயது 35 )கைது செய்யப்பட்டார். 16 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சரவணம்பட்டி காந்திமா நகர், எப்.சி. ஐ குடோன் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நடத்திய சோதனையில் கள்ள சந்தையில் மது விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பார் ஊழியர் சிவ சண்முகம் ( வயது39 )கைது செய்யப்பட்டார் .36 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.