கோவை அக்டோபர்.15 கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் 1299 சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு குறித்து கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடபட்டது. இதற்கான தேர்வு டிசம்பர் மாதம் 21 -ஆம் தேதி நடைபெற உள்ளது .இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்று வரும் மாணவ – மாணவிகளுக்கு இலவச மாதிரி தேர்வு கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று ( புதன்கிழமை) முதல் நடக்கிறது. வருகிற 22, 29,ஆம் தேதி, அடுத்த மாதம் 5, 12 ,19 ,26 ,ஆம் தேதி டிசம்பர் மாதம் 3, 10, 17 ,ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஒவ்வொரு மாதிரி தேர்வு முடிந்த உடனே தேர்வுக்கான விடை குறிப்புகள் மற்றும் மதிப்பெண்கள் விவரங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து பயனடையலாம்.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





