கோவை செப்டம்பர் 20கோவையைஅடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் ஊருக்குள் சுற்றி வரும் *ரோலக்ஸ்*என்ற காட்டு யானையை பிடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ரோலக்சைபிடிக்கும் பணி நடைபெற்றது.
அப்போது காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த அருகில் சென்ற வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவனை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்ட வனத்துறையினர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள பிரபல எலும்பு முறிவு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0