கோவை கோர்ட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஆகஸ்ட் 29 கோவை கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பின் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டுசெயல்பட்டது. அப்போது மாவட்ட கோர்ட்டுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து கோர்ட் அதிகாரிகள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும்மோப்பநாய் உதவியுடன் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் கோர்ட்டு வளாகம் முழுவதும் போலீசார் தீவிரசோதனை நடத்தினார்கள். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் இது வெறும் புரளி என தெரிய வந்தது..இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- இமெயிலில் இடம் பெற்றுள்ள தகவல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தேவையான எடுக்கப்பட்டு வருகிறது. என்று கூறினார்கள்.