பள்ளிக்கூட ஆசிரியை திடீர் மாயம்

கோவை செப்டம்பர் 30 கன்னியாகுமரி மாவட்டம் ,நெய்யூர், திங்கள் நகரை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் சினேகா ( வயது 24) இவர் கணபதி ,காந்தி மாநகரில் உள்ள தனது மாமா தேவகுமார் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சினேகா வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து அவரது மாமா தேவக்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.