கோவை அக்டோபர் 4.காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் ,2 ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தடை உத்தரவை மீறி சில இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது . இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அங்குள்ள காமராஜர் ரோட்டில் ( கடை எண் 1663) பகுதியில் கள்ள சந்தையில் மது விற்றதாக காரைக்குடி சீனிவாசன் நகரை சேர்ந்த கார்த்திக் ( வயது 22 )சரவணன் ( வயது 35, )பிரகாஷ் ( வயது 38)ஆகியோரை கைது செய்தனர்.. இவர்களிடம் இருந்து140 மது பாட்டில்களும் மது விற்ற பணம் ரு 1லட்சத்து 15 ஆயிரத்து 300 கைப்பற்றப்பட்டது. இதே போலபீளமேடு போலீசார் ஆவாராம்பாளையம், டாஸ்மாக் கடை பகுதியில் பதுக்கி வைத்து மது விற்றதாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சின்னு ( வயது 47) என்பவரைகைது செய்தனர். இவரிடமிருந்து 20 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டது. மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் துடியலூர் உடையாம்பாளையம் பகுதியில் உள்ள (கடை எண் 1618 ) அருகே கள்ள சந்தையில் மது விற்றதாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 28) என்பவரை கைது செய்தனர் .இவரிடம் இருந்து 32 மதுபாட்டில்கள். கைப்பற்றப்பட்டது..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





