காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் நாளை மறுநாள் 2 – ந் தேதி மூடல்

கோவை செப்டம்பர் 30 கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- காந்தி ஜெயந்தி தினமான நாளை மறுநாள் 2 – ந் தேதி (வியாழக்கிழமை) கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபார்கள், மற்றும் பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள், தமிழ்நாடு ஓட்டல்கள், சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மது கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யும் கூடங்கள் என அனைத்து மதுபான கடங்களும் மூடப்பட வேண்டும். விதிமுறைக்கு முரணாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கபடும்.இவரது அதில் கூறியுள்ளார்.