திருமண ஏக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை அக்டோபர் 6 கோவை செல்வபுரம் பக்கம் உள்ள தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45 )தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணமாகவில்லை.ஜாதக பொருத்தம் சரியாக இல்லாததால்திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் மனம் உடைந்த ராஜேஷ்குமார் திருமண ஏக்கத்தில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்