மரணம் அடைந்த ஊர்காவல் படை வீரருக்கு ரூ.1 லட்சம் சேமநிதி..எஸ். பி.கார்த்திகேயன் வழங்கினார்

கோவை அக்டோபர் 15கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தவர் விஸ்வநாதன்.இவர் கடந்த 30 ஆம் தேதி மரணம் அடைந்தார் இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை சேம நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.இதை இறந்தவரின் மனைவி விஜயலட்சுமியிடம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் நேற்று வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஊர்க்காவல் படை பிரதேச தளபதி சண்முகம் கலந்து கொண்டார்.