டாஸ்மாக் கடையில் தொழிலாளிக்கு பாட்டில் குத்து

கோவை அக்டோபர் 18 கோவை கெம்பட்டி காலனி , அவுசிங் யூனிட் ,. எல். ஜி. தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 45) கூலி தொழிலாளி. இவர் நேற்று உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போதுஅங்கு அதே பகுதியில் சேர்ந்த கசாப் மணிகண்டன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அவர் முத்துக்குமாரிடம் மது குடிக்க 30 ரூபாய் கேட்டார் .அவர் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கசாப் மணிகண்டன் முத்துகுமாரை பாட்டிலை உடைத்து குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜமுனா வழக்கு பதிவு செய்து கசாப் மணிகண்டனை கைது செய்தார். இவர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..