போதை ஸ்டாம்புகள் விற்பனை – 5 பேர் கைது..!

கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சரவணம்பட்டி போலீசார் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது ஒரு காலி இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் கணபதி சேர்ந்த ரேவந்த என்கிற அபி ( வயது 23) ரத்தினபுரி பெலிக்ஸ் பிரதீப் (வயது 25) வடவள்ளி பிரதீஷ் ( வயது 20 )என்பது தெரிய வந்தது .அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால் அவர்கள் மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் 3 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதில் அவர்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வந்த போதை ஸ்டாம்புகளை கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது .இதை தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் வர்ஷத் குமார் ( வயது 22) ஹரிபிரசாத் (வயது 20 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.பறிமுதல்செய்யப்பட்ட போதை ஸ்டாம்புகளின் மதிப்பு ரூ. 3லட்சம் இருக்கும். இது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..