எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்களிடம் பணம் திருடிய 7 பேர் கைது

கோவை ஜூலை 9 அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவை டவுன்ஹால், மணிக்கூண்டு பகுதியில் பஸ்சில் அமர்ந்தவாறு பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அந்தக் கூட்டத்தில் பாளையத்தோட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் ( வயது 38) என்பவர் பங்கேற்றார். கூட்ட நெரிசலில் அவரது மணி பரிசை ஒரு ஆசாமி திருடினார். அதில் ரூ 7 ஆயிரம் பணம், வங்கி கார்டு, ஏ.டி.எம் கார்டு ,ஆதார் கார்டு லைசென்ஸ் பேன் கார்டு ஆகியவை இருந்தது.இதே போல மேலும் 2 அதிமுக தொண்டர்களிடம் நைசாக பணம் திருடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர் .அந்த ஆசாமியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அங்கு பாதுகாப்புக்கு நிறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தொடர்ந்துவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதே போல மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. பிரமுகர்களிடம்திருட்டு நடத்திய சென்னை திருவேற்காடு டிரைவர் ராஜு ( வயது 40) கோவை ஆட்டோ டிரைவர் ராஜா என்ற குண்டு ராஜன் ( வயது 47) ஆந்திராவைச் சேர்ந்த தள்ளுவண்டி வியாபாரி சுரேஷ் ( வயது38 )ரமேஷ் ( வயது 37 )தர்மபுரியை சேர்ந்த கோபால் ( வயது 40 )திருச்சியை சேர்ந்த அருண்குமார் வயது 57 ஆகியோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.